தலையில் கல்லை போட்டு கணவர் கொலை மனைவி கைது - தனியாய் தவிக்கும் மகன்கள்

Update: 2023-01-29 07:27 GMT

கடையம் அருகே கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் டி.ராமநாதபுரத்தை சேர்ந்த கொத்தனார் பாலசுப்பிரமணியன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த நிலையில், தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பாலசுப்பிரமணியனை அவரது மனைவி திரவியக்கனியே கொலை செய்தது தெரியவந்தது.

பாலசுப்பிரமணியனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

எப்போதும் போல் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரத்தில் இருந்த திரவியக்கனி, சுப்பிரமணியன் தூங்கும் போது பின்பக்க தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து திரவியக்கனி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது 2 மகன்களும் பெற்றோர்கள் துணையில்லாமல் தவித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்