இந்தியாவின் உண்மையான நண்பன் யார்? அமெரிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - திருப்பி போட்ட மோடி பயணம்

Update: 2023-07-16 02:47 GMT

பிரதமர் மோடி தனது பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற நிலையில், இரு நாடுகளிடையே நடந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான பிரான்சின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணம் செய்தார். பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

இது பிரதமர் மோடியின் 5-வது அமீரக பயணமாகும். கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் அங்கு சென்றிருந்த போது, இருதரப்பு இடையிலான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம் காரணமாக 2022-2023 நிதியாண்டில் இருநாட்டு வர்த்தகம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து 85 பில்லியன் டாலர்கள், அதாவது 6 லட்சத்து 97 ஆயிரத்து 658 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்த நிலையில் அபுதாபி பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் இந்திய தேசியக் கொடி ஜொலித்தது. பிரதமர் மோடிக்காக பிரத்யேகமாக சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

அபுதாபியில் பிரதமர் மோடி - அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் இடையிலான இருதரப்பு சந்திப்பு நடந்தது. சந்திப்பில் இருநாட்டு உறவு, உணவு பாதுகாப்பு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாடுகள் இடையே டாலர்களை தவிர்த்து, ரூபாய் மற்றும் திர்ஹாம்-இல் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அபுதாபியில் டெல்லி ஐஐடி-யின் கிளை நிறுவனத்தை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமீரகம் தன்னுடைய இரண்டாவது வீடு எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இருதரப்பு வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது எனவும் இது விரைவில் பத்தாயிரம் கோடி டாலர்கள் என்ற உச்சத்தை எட்டும் என்றார்.

அமீரக அதிபரை உண்மையான நண்பன் என நட்பு பாராட்டிய பிரதமர் மோடி, அமீரகத்தில் நடைபெற இருக்கும் சி.ஓ.பி-28 பருவ நிலை மாநாட்டில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்