தென் கொரிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில், அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.
தங்கள் வான்பரப்பில் தென் கொரியாவின் ட்ரோன் அத்துமீறி பறந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது. இந்நிலையில்,
அந்த ட்ரோன் தங்களுடையது அல்ல என்றும், வடகொரியாவை தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும். நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.