Russia | உக்ரைனோடு கை கோர்த்த 2 நாடுகள்... ரஷ்யாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப பிரிட்டனும் பிரான்சும் முடிவெடுத்த நிலையில், அதன் ஒருபகுதியாக 2 ஆயிரத்து 270 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்த பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜான் ஹீலி, இந்த நிதியானது கவச வாகனங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், ட்ரோன் எதிர்ப்புப் பாதுகாப்புக்கும், அத்துடன் படைகள் போருக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கும் செலவிடப்படும் என்று தெரிவித்தார்...