Thiruparangundram | திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியதாக புகார்- வழக்கு
திருப்பரங்குன்றம் மலை மீது கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 21-ம் தேதி, தர்கா நிர்வாகத்தினர் மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் கொடி கட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.