Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-09-19 00:56 GMT

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில், செக் குடியரசு வீராங்கனை லின்டா சாம்பியன்.... இறுதிப்போட்டியில், போலந்து வீராங்கனை லினட்டை வீழ்த்தி அபாரம்....

சென்னை ஓபன் டென்னிஸ் வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளிப்பு..... இறுதிப்போட்டியை ரசிகர்களோடு கண்டுரசித்து உற்சாகம்.....

சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த நரிக்குறவ பெண் அஸ்வினி, முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டுவதாக குற்றச்சாட்டு... காவல்நிலையத்தில் வணிகர்கள் புகார்....

கோவையில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதால், என்னை எதிரியாக முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்... மூன்று முறை சோதனை நடத்தியது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்...

தாய்மொழி கல்வியை ஊக்குவித்து, அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்...மத்திய கல்வி அமைச்சர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.... 

வெள்ளையர் வெளியேறினால் குண்டூசி கூட இந்தியாவால் தாயாரிக்க முடியாது என்றனர், தற்போது 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இருக்கிறோம்... இந்தியா குறித்து தெலுங்கான ஆளுநர் தமிழிசை பெருமிதம்..

மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய்... லாட்டரி சீட்டை வாங்கிய மறு நாளிலேயே கோடீஸ்வரானாக மாறிய கூலித் தொழிலாளி...

தமிழத்தில் நேச்சுரோபதி மற்றும் யோகா மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் ராமதாஸ் அதாவலே உறுதி...

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு.... 8 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நகைகள், சொகுசு கார்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்....

சேலம் அருகே பலகாரச் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த தம்பதி..... பணத்தை மீட்டு தரக்கோரி பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.....



Tags:    

மேலும் செய்திகள்