Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-08-07 00:56 GMT

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி... மக்களவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான உத்பல் சிங் குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றார்... எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி

குடியரசு துணை தலைவராக வெற்றி பெற்றுள்ள ஜெகதீஷ் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்தினார், பிரதமர் மோடி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வாழ்த்து...

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிற உணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... விடுதலையின் அமிர்த பெருவிழா குறித்த மூன்றாவது தேசிய கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்....

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கலைஞர் நினைவு தின மாரத்தான்.... பெசன்ட்நகர் கடற்கரையில் தொடங்கி வைத்தனர், அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன்...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி செல்ல ஏற்பாடு...

பிஎஸ்என்எல் ஊழியர்கள் திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்... மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எச்சரிக்கை...


Tags:    

மேலும் செய்திகள்