அண்ணன் காதலியை மணர்ந்த தம்பி... திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்த உல்லாசம்...

Update: 2023-07-23 16:21 GMT

மனைவியுடன் தகாத உறவில் இருந்த அண்ணனை, கொல்ல முயன்ற தம்பி, காட்டெருமை தாக்கி அண்ணன் சுய நினைவை இழந்ததாக போலீசாரிடம் நாடகமாடியுள்ளார்.

இதுபற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

விஜயகாந்த், கரண் நடித்த கண்ணுபடபோகுதய்யா பட பாணியில், அண்ணன் காதலித்த பெண்ணை, தம்பி திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில், இந்த விபரீத சம்பவம் நடந்தேறியுள்ளது...

ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வினோத்... இவரது உடன் பிறந்த தம்பி விவேக்...

விவேக்கிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதில் விவகாரம் என்னவென்றால்,, திருமணத்துக்கு முன் வெண்ணிலா காதலித்தது என்னவோ, விவேக்கின் அண்ணனான வினோத்தைத் தான்...

ஆனால், கண்ணுபட போகுதய்யா படத்தில் வரும் காட்சியை போலவே, தம்பியான விவேக் வெண்ணிலாவை விரும்பியுள்ளார். அதன் பிறகு குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில், வெண்ணிலா விவேக்கையே திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இங்கு ட்விஸ்ட் என்னவென்றால், விவேக்கை திருமணம் செய்த வெண்ணிலா, வினோத்துடன் தொடர்பை துண்டிக்காததுதான், பிரச்சினை விபரீதமாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் விவேக்கிற்கு தெரியவர, தகாத உறவை துண்டிக்குமாறு கூறியும், அதனை வினோத்தும், வெண்ணிலாவும் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், எஸ்.புத்தூர் செல்லும் வழியில், காட்டெருமை முட்டி தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறி வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, விவேக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அண்ணன் தம்பிக்குள் நிலவி வந்த பிரச்சினை போலீசாருக்கு தெரியவே, விவேக் நாடகமாடுவது தெரியவந்தது.

இதனிடையேதான், காட்டெருமை தாக்கியதால் வினோத் சுயநினைவை இழக்கவில்லை என மருத்துவ தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், விவேக்கிடம் தங்களது பாணியில் போலீசார் போலீசார் விசாரணை நடத்தியபோது, அண்ணனைக் கொல்ல முயன்றது அம்பலமானது.

அதாவது சம்பவத்தன்று, எஸ் புத்தூர் செல்லும் வழியில், மனைவியுடன் தகாத உறவு தொடர்பாக விவேக் வினோத்திடம் தகராறு செய்துள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தின்போது, விவேக் கல்லால் தலையில் தாக்கியதில், படுகாயமடைந்த வினோத் சுயநினைவை இழந்தது தெரியவந்தது. போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக, காட்டெருமை முட்டியதாக விவேக் நாடகமாடியதும் போலீசாரின் விசாரணயில் அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து விவேக்கின் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்