நடு ரோட்டில் உயிருக்கு போராடிய இளைஞர் - யாரும் உதவாத போது முதலில் ஓடி வந்த முதியவர்

Update: 2023-07-05 03:03 GMT

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞன் மீது வேன் மோதி விபத்தில், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களியனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், அங்குள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வேலைக்கு பைக்கில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னே வேகமாக சென்ற அரசு மருத்துவமனை வேன் அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்