அரசு பஸ் டிரைவரை எகிறி எகிறி அடித்த தனியார் பஸ் டிரைவர்

Update: 2022-12-16 02:27 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் முன்னிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் கடையிலிருந்து கிழக்கே கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்துக்கும் பேரூர் கடையிலிருந்து மருத்துவக் கல்லூரி சந்திப்புக்கு செல்லும் தனியார் பேருந்துக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் போட்டி ஏற்பட்டது.

இதனால் இரண்டு பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்