இணையத்தில் 1 கோடி பேரின் தகவல்கள் திருட்டு - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2022-09-30 09:05 GMT

ஆஸ்திரேலியாவில் இணைய தாக்குதல் நடத்தி 1 கோடிக்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அந்நாட்டின் 2வது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஆப்டஸின் தலைமை நிர்வாகி கெல்லி பேயர் ரோஸ்மெரின் மன்னிப்பு கோரியுள்ளார். வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிம எண்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். அதில் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்