மது போதையில் இளைஞர்கள் ரகளை - தட்டிக்கேட்டதால் தலைமை காவலர் மண்டை உடைப்பு | viruthachalam

Update: 2022-12-04 14:26 GMT

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக் கேட்ட காவலர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக அதிக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதைத் தட்டிக் கேட்ட தலைமை காவலர் செல்வராஜ் மீது, அந்த இளைஞர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மண்டை உடைப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்