ம.பி. முதல்வர் முன் குழந்தையை தூக்கி வீசிய தந்தை.. மேடையில் பரபரப்பு

Update: 2023-05-16 09:02 GMT

மத்தியப்பிரதேசத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை, அவரது தந்தை முதல்வர் முன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபால் அருகே சாகரில் நடைபெற்றுவந்த மாநாட்டில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று இருந்தார். அப்போது முகேஷ் படேல் என்பவர் நோய்வாய்ப்பட்ட தனது ஒரு வயது குழந்தையை முதல்வர் அமர்ந்திருந்த மேடை மீது வீசினார். அவரிடம் விசாரித்ததில் மகனின் மருத்துவ செலவிற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்க இவ்வாறு செய்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து குழந்தையின் மருத்துவ உதவிக்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி, ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்