மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கருப்பு முக கவசம் அணிந்து தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம்

Update: 2022-12-01 12:35 GMT

திருச்சிற்றம்பலம் மின்துறை அலுவலகத்தை, பூத்துறை தொழிற்சாலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால், அப்பகுதி பரபரப்பானது. பூத்துறை தொழிற்சாலைகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் கூறி, தொழிற்சாலை உரியமையாளர்கள் கருப்பு முக கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பூத்துறை தனியார் தொழிற்சாலைகளுக்கு, தனி பீடர் மின்பாதை அமைத்து தரக் கோரி வலியுறுத்தினர். இதனிடையே, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்