யானை மீதேறி வந்த சாமியை ஆரத்தி எடுத்து மலர் தூவி தரிசனம் செய்த பக்தர்கள்... | KANYAKUMARI

Update: 2023-01-01 12:59 GMT

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அளப்பங்கோடு ஸ்ரீபூதத்தான் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வாக யானைகள் ஊர்வலம், வாண வேடிக்கைகளுடம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொம்பன் யானையான, புதுப்பள்ளி சாபு யானை இந்த ஊர்வலத்தில் பங்கேற்றது. இதனிடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த ஊர்வலத்தை, சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, யானை மீதேறி வந்த சாமியை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்