பொய் வழக்கில் தமிழர்கள் ஆந்திராவில் அதிரடி கைது... பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி சித்திரவதை...
புளியாண்டப்பட்டி கிராமத்துல மனைவி அருணா மற்றும் 7 வயசு மகனோட வாழ்ந்துருக்காரு. குறவர் இனத்த சேர்ந்த ஐயப்பனுக்கு சரியான வேலைவெட்டி கிடைக்காத காரணத்தால கொள்ளையடிக்கிறதையே முழுநேர தொழில்ல செஞ்சி இருக்காரு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகான்னு அண்டை மாநிலங்கள்ல ஐயப்பன் மேல பல குற்றவழக்குகள் நிலுவையில்ல இருக்கு. இந்த சூழல்ல தான் ஆந்திரா மாநிலம் சித்தூர்ல உள்ள பிரபல நகைக்கடையில ஐயப்பன் ஒரு கிலோ தங்கம் திருடுனதா சமீபத்துல கைதாகி இருக்காரு. அவர்கிட்ட இருந்து ஆந்திரா போலீஸ் ஏற்கனவே 700 கிராம் தங்கத்த மீட்டு இருக்கிறதாவும் சொல்லபடுது. அதன் தொடர்ச்சியா தான் மீதமுள்ள 300 கிராம் தங்க நகையே தேடி சித்தூர் போலீஸ் அவரோட சொந்த ஊரான புளியாண்டப்பட்டிக்கு வந்திருக்காங்க.
கொள்ளையடிச்ச நகைய ஐயப்பன்னோட குடும்பம் தான் மறைச்சி வைச்சிருக்கிறதா சந்தேகப்பட்ட காவல்துறை, அவரோட மனைவி அருணாவோட சேர்ந்து மொத்தம் 10 பேர சித்தூர் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போய்ருக்காங்க. அங்க தான், வெற்றிமாறன் படங்கள்ல காட்டுற மாதிரி பெண்களையும் கொடூரமான முறையில விசாரிச்சதா குற்றம் சாட்டுறாங்க.பெண்களோட பிறப்பு உறுப்புல எட்டி மிதிச்சு, பின்பக்கத்துல மிளகா பொடிய தூவி செய்யாத தப்புக்கு அவங்கள கொடுமைப்படுத்தினதா வேதனையோட சொல்லியிருக்காங்க. விசாரணைக்கு அழைச்சிட்டு போனவங்கள்ல கலெக்டரோட உதவியோட பல கட்ட போராட்டத்திக்கு பிறகு மீட்டிருக்கிற உறவினர்கள். இப்போ இது தொடர்பா உரிய விசாரணை மேற்கொள்ளனும்னு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கிட்டயும் கோரிக்கை வெச்சிருக்காங்க.