தமிழக அரசின் நெடுஞ்சாலை சட்டம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-05-11 14:52 GMT

தமிழக அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில், கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. மத்திய அரசின் இந்த சட்டத்தில் இருந்து, தமிழக நெடுஞ்சாலைகள் சட்டம், ஹரிஜன் நல சட்டம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டது. இந்த சட்டத்திருத்த‌த்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், தமிழக அரசின் நெடுஞ்சாலை சட்டம், நில கையப்படுத்துதலில் ஏற்படுத்தும் தவிர்க்கக்கூடிய தாமதத்தை தடுக்கும் நோக்கில் உள்ளதால், அந்த சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்