சிம்புவின் 'பத்து தல' update இன்று.. காத்திருங்க மக்களே...

Update: 2023-01-31 09:57 GMT

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'முஃப்தி' என்ற படத்தின் ரீமேக்கான இப்படத்தை, 'சில்லுனு ஒரு காதல்' படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5:04 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்