அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைத்த சவுதி அரேபியா...வெற்றியை கண்டு மகிழ்ந்த சவுதி இளவரசர்

Update: 2022-11-23 08:05 GMT

அர்ஜென்டினாவுக்கு எதிராக சவுதி தேசிய அணி எதிர்பாராத வெற்றியை அடைந்ததால் ரியாத்தில் உள்ள சவுதி மக்களும் சவுதி இளவரசர், முகமது பின் சல்மானும் மகிழ்ச்சியில் கொண்டாடினர். கானாவுக்குப் பிறகு போட்டியில் இரண்டாவது குறைந்த தரவரிசையில் உள்ள அணியான சவுதி அரேபியா, லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இதை ரியாத்தில் உள்ள சவுதி மக்களும் சவுதி இளவரசரும் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்