"புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது"...உறைபனியில் உறைந்த உதகை

Update: 2022-12-31 04:46 GMT

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்ர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம் இருக்கும். குறிப்பாக நவம்பர் மாதம் துவக்கத்தில் நீர் பனி ஆரம்பித்து படிபடியாக உறைபனி பொழிவு காணப்படும், ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணாத்தால் பனிபொழிவு தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி பொழிவு காணப்பட்டது.

உறைபனி பொழிவு காரணமாக உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் புள்வெளிகள் ஈறைபனி பொழிவு காணப்பட்டது. குறிப்பாக உதகை அருகே உள்ள தலைகுந்தா , HPF, காந்தள் , பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி புள்வெளிகளிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது படிந்திருந்தது. இதனால் உதகையில் கடுங்குளிர் நிலவுகிறது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கடுங்குளிர் காரணமாக உதகை நகரப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3 டிகிரி செல்சியசும் , சமவெளி பகுதியில் 0 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்