"இந்தியாவை எந்த ஒரு சக்தியும் அழிக்க முடியவில்லை.." - பிரதமர் நரேந்திர மோடி | Thanthi TV

Update: 2023-01-28 15:58 GMT

இந்தியாவை எந்த ஒரு சக்தியும் அழிக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ தேவ்நாராயணனின் ஆயிரத்து 111-வது அவதார மஹோத்சவ் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி பழமையான இந்திய வரலாறு, கலாச்சாரம், நாகரிகம் குறித்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்தியாவை புவியியல் , கலாச்சாரம், சமூக மற்றும் சித்தாந்த ரீதியாக பிளவுபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இருப்பினும் இந்தியாவை எந்த ஒரு சக்தியும் அழிக்க முடியவில்லை என்றும் ,அடிமை மனநிலையில் இருந்து வெளியேறி நாட்டின் மீதான நமது கடமையை நினைவு கூறுவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்