38 ஆண்டுக்கு பின் அதே பொலிவுடன்.. டிஜிட்டல் முறையில் 'முதல் மரியாதை' ரிலீஸ் - கொண்டாடும் ரசிகர்கள்

Update: 2023-03-26 06:19 GMT
  • சிவாஜி கணேசன், பாரதிராஜா, இளையராஜா, வெற்றி கூட்டணியில், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியாகி 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வெற்றித் திரைப்படம் முதல் மரியாதை.
  • படத்தின் பாடல் என்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை 85 காலகட்டத்தில் முணுமுணுக்க வைத்ததது.
  • படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
  • மண்ணின் மனத்தோடு எடுக்கப்பட்டதால், இன்றைக்கும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள்.
  • தற்போது நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் 50 திரையரங்குகளில் வெள்ளியன்று வெளியாகி முதல் மரியாதை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
Tags:    

மேலும் செய்திகள்