விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய எம்.பி.ராசா..

Update: 2023-05-08 02:33 GMT

கோத்தகிரி சாலையில் விபத்தில் சிக்கியவர்களை நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கேரளாவில் இருந்து கோத்தகிரி வழியாக உதகை வந்த கேரள சுற்றுலா பயணிகளின் கார் விபத்தில் சிக்கியது. அப்போது, அந்த வழியாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, தனது பாதுகாப்பு வாகனத்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்