மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்திய எம்எல்ஏ

Update: 2023-06-28 03:15 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் எம்எல்ஏ கிருஷ்ணசாமி அரசு பள்ளியில் ஆய்வு செய்து, மாணவிகளை ஆங்கிலத்தில் பேச வைத்தார். நசரத்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்ற அவர், மாணவிகளுக்கு ஆங்கில பாடத்தை நடத்தினார். பின்னர் மாணவிகளை ஆங்கிலத்தில் பேச வைத்தார். பின்னர் ஒன்றாம் வகுப்பில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில், மாணவர்களாக மாறி, ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனித்தார். பின்னர், தமிழகத்தின் முதல்வர் யார், தொகுதி எம்எல்ஏ யார் போன்ற கேள்விகளை எழுப்பி, சரியாக பதில் சொன்ன மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்