விடுதியில் மருத்துவ மாணவர் தற்கொலை..சிக்கிய கடிதம்.. துடி துடித்த பெற்றோர் - தர்மபுரியில் அதிர்ச்சி

Update: 2022-11-06 03:39 GMT

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஓமலூர் அருகே உள்ள முத்துநாயகன்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான மாணவர் இளம்பரிதி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் அவர்

தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கியபடி சடலாக மீட்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவர் இளம்பரிதி, தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. மருத்துவ படிப்பு அந்த மாணவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால், படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே, கல்லூரி முதல்வர், மாணவன் தங்கியிருந்த விடுதி வார்டன், அறை நண்பர்கள் அருகில் இருந்த மாணவர்கள் உள்ளிட்டோரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்