மாஸ் லுக்கில் உதயநிதி, வடிவேலு... வெளியான 'மாமன்னன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Update: 2023-05-01 00:17 GMT

மாமன்னன் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் படம் உருவாகி வரும் நிலையில், வடிவேலு துப்பாக்கியுடனும், உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியுடன் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

மேலும் படம் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக முதல் போஸ்டர் மே தினத்தில் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்