"என்ன தான் ஆச்சு நம்ம சூப்பர் ஹீரோஸுக்கு..?" - சோக சூப்பர்மேன், துணி துவைக்கும் ஒன்டர் உமன்... இணையத்தை கலக்கும் பிக்ஸ்

Update: 2022-12-10 13:47 GMT

கேரளா மக்களை சூப்பர் ஹீரோக்களாக சித்தரித்து வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்ஸ்டகிராமில் அருண் நூரா என்பவர் பகிர்ந்த புகைப்படங்கள் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்களை குடைப்பிடித்தப்படி பார்க்கும் பேட்மேன், துணி துவைக்க சிரமப்படும் வொண்டர் வுமன், ஏரியில் கவலையாக அமர்ந்து மீன் பிடிக்கும் அயர்ன்மேன், ஹோட்டல் ஒன்றில் கோபமாக அமர்ந்திருக்கும் சூப்பர் மேன் உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஆக்கிரமித்துள்ளன. சாதாரண மக்கள் சூப்பர் ஹீரோக்களாக மாற்றப்பட்டுள்ள அனிமேஷனுக்கு, கவலையான சூப்பர் ஹீரோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்