லாரியில் இருந்து இறங்கிய கிளினர்... சட்டென மேல கவிழ்ந்தால் அதிர்ச்சி! - நெஞ்சை பதைக்கும் காட்சிகள்..

Update: 2023-02-11 11:24 GMT

சாலையோரம் லாரியை நிறுத்துவதற்காக கீழே இறங்கி பக்கவாட்டில் வாகனம் வருகிறதா என பார்த்த கிளினர் மீது, பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்தது. கொச்சியில் இருந்து மரம் ஏற்றி சென்ற ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்த முடிவெடுத்துள்ளார். அதனால், தன்னுடன் வந்த கிளினரை கீழே இறங்கி லாரியின் பக்கவாட்டில் வாகனம் வருகிறதா என பார்க்க சொல்லியுள்ளார். அதன்படி கிளினர் கீழே இறங்கியதும், பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்தது. அதில், சிக்கிய கிளினரை தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்