பேருந்தில் இன்ஸ்டா ட்ரெண்டிங் ரீல்ஸ்... வைரலான வீடியோ.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை

Update: 2023-04-27 01:51 GMT

கேரளாவில் இணையத்தில் வைரலான சுற்றுலா பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரியில் ஓடும் சுற்றுலா பேருந்தின் மேல் அமர்ந்தும், தொங்கி கொண்டும் ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள், அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவானது பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், மோட்டார் வாகனத்துறையினரின் கவனத்திற்கும் சென்றது. அதன், நடவடிக்கையாக சுற்றுலா பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர். மேலும், ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்