சென்னையில் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கியுள்ளது.
இது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்கும் இரண்டாம் கட்ட நிதியுதவி ஆகும்.
இந்த கடனுதவி மூலம், 3, 4, மற்றும் 5 ஆகிய வழித்தடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.