தேன் குரல்.. திகட்டாத பாடல்கள்.. தென்னிந்தியாவின் இசையரசி ஜானகி..!

Update: 2023-04-23 10:52 GMT

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அன்போடு அழைக்கப்படும் ஜானகி, 4 தேசிய திரைப்பட விருதுகளையும் 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்... கொஞ்சும் சலங்கை படத்தில் வரும் சிங்கார வேலனே தேவா பாடல் மூலம் திரைத்துறையில் பாடகியாக தனது பயணத்தைத் துவங்கிய ஜானகி, தன் கொஞ்சும் குரலால் அனைத்து வயது ரசிகர்களையும் மயங்கச் செய்தவர்... 25 மொழிகளில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் பாடல்களைப் பாடி அசத்திய பெருமை ஜானகிக்கு உண்டு...

Tags:    

மேலும் செய்திகள்