இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-22 17:56 GMT

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு...

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, ராணுவ அணிவகுப்பு மரியாதை...


பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடக்கிறது, 18 கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசனை...


சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் பாட்னா சென்றார் முதல்வர் ஸ்டாலின்...

அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்...


உயர்கல்வியில் மாணவர்கள் பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது...

கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...


ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. செயல்படுகிறது...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்...

Tags:    

மேலும் செய்திகள்