சென்னையில் காரில் சென்று டிப்டாப்பாக ஆடுகளை திருடிய பெண் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2023-01-12 05:00 GMT

சென்னையில் காரில் சென்று ஆடுகளை திருடிய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் சின்ன பொன்னன். இவரது ஆடுகளை கடந்த மாதம் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காரில் சென்று ஆடுகளை திருடிய ஜெயக்குமார், சரோஜினி ஆகியோரையும், திருடப்பட்ட ஆடுகளை வாங்கிய பரூக் என்பவரையும் கைது செய்தனர்.

3 பேரும் கடந்த 6 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்