ஆன்லைன் சூதாட்ட கடனால் விரக்தி... சித்தியை இரும்பு ராடால் தாக்கிய இளைஞர் - விசாரணையில் பகீர் தகவல்

Update: 2022-09-14 14:49 GMT

ஆன்லைன் சூதாட்ட கடனால் விரக்தி... சித்தியை இரும்பு ராடால் தாக்கிய இளைஞர் - விசாரணையில் பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள மாமரத்துபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டுமான பணிகளுக்காக வெங்கேடஷ் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரின் மனைவி வசந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வந்தது.

உடனே மருத்துவமனை சென்று பார்த்த போது பலத்த காயங்களுடன் இருந்தார்.

அவரிடம் விசாரித்த போது, வசந்தியின் சகோதரி மகனான பிரகாஷ் அவரை தாக்கியது தெரியவந்தது.

எலெக்ட்ரிகல் வேலை பார்த்து வரும் பிரகாஷ், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்திருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட கடனை அடைக்க தன் சித்தியிடம் இருந்த நகைகளை பறிக்க திட்டமிட்டார்.

இதற்காக இரும்பு கம்பியுடன் சென்ற அவர், சித்தியை கொடூரமாக தாக்கி நகைகளை எல்லாம் பறித்துச் சென்றது உறுதியானது.

இதன்பேரில் போலீசார் பிரகாஷை கைது செய்ததோடு அவர் வசமிருந்த நகைகளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்