வீட்டு முன் பேசிய நண்பர்களை... ஓட ஓட விரட்டி வெட்டிய கொடூரம் - பழனியில் பயங்கரம்

Update: 2023-05-01 08:41 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரு இளைஞர்களை கும்பல் அரிவாளால் தாக்கி தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பழனியை சேர்ந்த சாலமன் மற்றும் மாரிமுத்து ஆகியோர், வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிலரை அழைத்து வந்து சாலமன் மற்றும் மாரிமுத்துவை அரிவாளால் தாக்கி தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு நகை பறிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றது தெரியவர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்