ஹாலிவுட்டில் சோழர்கள்..! லாஸ் வேகாஸில் பறந்த புலி கொடி.. உலகளவில் மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன்'

Update: 2022-09-25 15:52 GMT

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வரும் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக லாஸ் வேகாஸில் உள்ள டிஜிட்டல் பில் போர்டுகளில் பொன்னியின் செல்வன் டிரைலர் ஒளிபரப்பாகி வருகிறது.

லாஸ் வேகாஸில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ் திரைப்பட டிரைலர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்