கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கிய முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மை | karnataka | basavaraj bommai

Update: 2022-12-22 06:55 GMT

கர்நாடகா மாநில முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மை, இனிப்பு கடைக்கு நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. கர்நாடகா குளிர்கால சட்டமன்ற கூட்டத்தோடர், பெலகாவி மாவட்டத்தின் சுவர்ண சவுதாவில் நடைபெற்று வருகிறது. இதனால், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பெலகாவி நகரில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள இனிப்புக் கடை ஒன்றிற்கு முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மை, தானே நேரடியாக சென்று இனிப்பு வாங்கிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்