கணவன் வேலைக்கு செல்லாததால் - குழந்தையை மூழ்கடித்து கொன்ற தாய்!

Update: 2023-06-07 07:06 GMT

தீபாளப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் - வசந்தி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான சசிகுமார் சரியாக வேலைக்கு செல்லாமலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வசந்தியின் குழந்தை திடீரென உயிரிழந்தது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை இறந்துவிட்டதாக வசந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, வசந்தியே, குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. மதுவுக்கு அடிமையான கணவன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், எப்படி பெண் குழந்தையை காப்பாற்றுவது என்ற விரக்தியில் கொலை செய்தது தெரியவந்தது. வசந்தியை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்