நடிகை பக்கத்தில் அமர்ந்து சுய இன்பம் செய்த சைக்கோ இளைஞருக்கு ஜாமீன்.. வெளியே வந்ததும் உற்சாக வரவேற்பு

Update: 2023-06-06 08:47 GMT

திருச்சூரில் இருந்து கொச்சி செல்வதற்காக, கேரள நடிகை நந்திதா சங்கரா அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே சவாத் ஷா என்ற இளைஞர் அமர்ந்திருந்தார். நடிகையிடம் சகஜமாக பேசியபடி இருந்த இளைஞர், திடீரென நடிகையை தொட்டு பேசியதுடன், அந்தரங்க பகுதியில் கை வைத்து ஆபாச சைகை காட்டியுள்ளார். இளைஞரின் செய்கையை வீடியோ எடுத்த நடிகை, அதனை தட்டிக் கேட்டபோது, அந்த நபர் பேருந்து நின்றதும் தப்பியோடினார். சுதாரித்துக் கொண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் பொதுமக்கள், அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சவாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த சவாத்தை, அகில கேரள ஆண்கள் சங்கத்தின் சார்பில் மாலைகள் அணிவித்து சிலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதற்கு விளக்கமளித்த அந்த சங்கத்தினர், சமூகவலைதள பக்கத்தில் ஏராளமானோர் பின்தொடர, இளைஞர் மீது நடிகை அபாண்டமாக குற்றம் சாட்டியதாகவும், இந்த சம்பவத்தில், சவாத்திற்கு ஆதரவாக ஆண்கள் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்தனர். கேரள ஆண்கள் சங்கத்தினரின் இந்த சம்பவத்தால், பெண்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்