சிறப்பு ஆய்வாளர் மீதே தாக்குதலா?.. நிலத்தகராறால் திண்டுக்கல் அருகே கலவரம்..

Update: 2023-07-16 06:39 GMT

அய்யலூர் அருகே, நிலத்தகராறு தொடர்பாக போலீஸ் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் குமாரவேல் என்பவருக்கும், அய்யலூரைச் சேர்ந்த வேங்காயி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக வடமதுரை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை அளந்த போது, சார்பு ஆய்வாளர் குமாரவேல், அவரது குடும்பத்தினர் மீது வேங்காயி தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த குமாரவேல் உள்பட இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்