மெரினா கடற்கரையில் - No Entry - பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் | Marina Beach

Update: 2022-12-10 15:52 GMT

சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சென்னை மாநகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், கட்டங்கள் இடிந்து விழுந்தும் சேதமடைந்தன.

கடற்பரப்பில் அதிக காற்று வீசியதோடு தரைக்காற்றும் அதிகளவில் வீசியது. இதன் காரணமாக சென்னை, மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டன.

இந்நிலையில், மாண்டஸ் புயலானது முழுமையாக கரையை கடந்து விட்ட போதிலும் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை சீற்றம் குறையாமல் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இன்று வார விடுமுறை நாள் என்பதால் கடற்கரையில் அதிகளவில் தங்கள் குடும்பங்களுடன் குவிந்து வரும் பொதுமக்களை திரும்பி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்