டூவீலரில் சென்ற தம்பதியை தாக்க ஆக்ரோஷமாக ஓடி வந்த யானை

Update: 2022-11-13 16:45 GMT

கேரள மாநிலம் இடுக்கியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், தங்களை தாக்க வந்த காட்டு யானையிடம் இருந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மூணார் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை காட்டு யானைகள் தாக்குவதாக புகார் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், மாங்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை காட்டு யானை ஒன்று தாக்க வந்துள்ளது. அதனால் அச்சமடைந்த அவர்கள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர். எனினும், ஆக்ரோஷமான யானை அவர்களின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு சென்றது. இந்த நிலையில் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய தம்பதினரை மீட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த வனத்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்