எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-05-21 07:19 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஓ.பி.எஸ். ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தியை அ.தி.மு.க.வினர் தாக்க முயன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் எடப்பாடியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து காரில் வெளியே வந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தியை, அ.தி.மு.க.வினர் தாக்க முற்பட்டனர். எனினும், அவர் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்