இனி தான் ஆட்டமே இருக்கு..! ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம் | Agni Natchathiram | Summer

Update: 2023-05-04 02:56 GMT

அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 100 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிகிறது. இன்று மே 4ஆம் தேதி தொடங்கி, மே 29 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த காலத்தில், குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக தண்ணீர் பருகுவதோடு, நீர் சத்து பழங்களை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதுடன், வெளியே செல்லும் போது குடையுடன் செல்வதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்