ஜப்பான் பிரதமர் மீது வீசப்பட்ட குண்டு..பிரசாரத்தின் போது நடந்த பயங்கரம்..பிரதமரை குண்டு கட்டாக தூக்கி சென்ற காட்சி

Update: 2023-04-16 02:12 GMT

ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கு காலியாக இருக்கும் இடங்களுக்கு இடைத்தேர்தல் 23 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி வக்காயமா பகுதிக்கு பிரசாரத்திற்காக சென்ற புமியோ கிஷிடோ, அங்குள்ள சிக்காசாக்கி துறைமுகத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றவிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் புமியோ கிஷிடா நோக்கி மர்ம பொருள் ஒன்றை வீசினார். அதிலிருந்து தற்காத்துக்கொண்ட பிரதமர் புமியோ கிஷிடோவை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குண்டு வீசிய நபரையும் மடக்கி பிடித்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்