முதல்வரை கதறி அழ வைத்த படத்துக்கு அரசின் அதிரடி அறிவிப்பு

Update: 2022-06-20 03:19 GMT

கன்னடத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டி நடிப்பில், மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படம் 777 சார்லி. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்திற்கு சென்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நிலையில், திடீரென்று அழுதார். தனது மறைந்த சன்னி என்ற நாயை இந்தப் படம் நினைவூட்டியதாகக் கூறினார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கை அறிவித்துள்ளது. அதன்படி ஆறு மாதங் களுக்கு இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுபடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படவில்லை என்பதை ஒவ்வொரு டிக்கெட்டிலும் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்