மாமியாருக்காக எடுத்து சென்ற 20,000 - நடுவழியில் நடந்த விபரீதம்

Update: 2023-06-04 13:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை மேட்டு தெருவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தனது மாமியாரின் மருத்துவ செலவிற்காக, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அப்போது மறைமலைநகர் அருகே கருநீலம் பகுதியில் வழிமறித்த 2 பேர், கத்தியால் பிரபாகரனின் தலையில் தாக்கி, அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், கொளத்தூரை சேர்ந்த அவினேஷ் மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த அழகர்சாமி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.7

Tags:    

மேலும் செய்திகள்