இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-05-03 18:06 GMT

புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்....காளை முட்டியதில் உயிரிழந்த பார்வையாளர் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு... 

அதிமுக ஆட்சி காலத்திலேயே தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுவிட்டது...அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை இயந்திரங்கள் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்....

டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்தவில்லை.....அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்...

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி..சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்...

தென்கிழக்கு வங்கக்கடலில் 7ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறவும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்