இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-03-22 17:54 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி...

2க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரையும் இழந்தது

சென்னையில் நடந்த போட்டியில் இந்தியா தோல்வி எதிரொலி...

ரசிகர்கள் ஏமாற்றம்.. தோல்வி முகம் தெரிந்தவுடனே மைதானத்தை விட்டு கவலையுடன் வெளியேறினர்...

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை....

மரபணு பரிசோதனை, கடுமையான சுவாச பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்.... 

விருதுநகரில் ஜவுளி பூங்கா அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி....

சேலம் ஜவுளி பூங்கா திட்டத்துக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை....

சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கலாகிறது....

முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் பலியான 9 பேர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்....

காயமடைந்தோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்..

குடோன் உரிமையாளர் நரேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்