மூக்கை நுழைத்த நாடுகள்.. அணுஆயுத ஆட்டத்துக்கு தயாராகும் புதின்.. ரெட் பட்டனை அழுத்திய ரஷ்யா

Update: 2024-05-22 07:53 GMT

மூக்கை நுழைத்த நாடுகள்.. அணுஆயுத ஆட்டத்துக்கு தயாராகும் புதின்.. ரெட் பட்டனை அழுத்திய ரஷ்யா

ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுத பயிற்சியைத் தீவிரமாகத் துவங்கியுள்ளது... தந்திரோபாய அணு ஆயுதங்களைத் தயாரித்து பயன்படுத்துவதற்கான நடைமுறை பயிற்சி அடங்கிய முதற்கட்ட பயிற்சியை ரஷ்ய படைகள் துவங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது... ரஷ்ய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக மேற்கு நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டி இருந்த நிலையில் இம்மாத துவக்கத்தில் பயிற்சிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்... உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், மற்றும் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்... உக்ரைனில் நடக்கும் போரில் மேற்கு நாடுகள் தலையிடுவதை எதிர்த்து புதின் எச்சரிக்கை விடுக்கும் சமிக்ஞையாக இந்த தந்திரோபாய அணு ஆயுத பயிற்சி பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்